சங்ககிரியில் சைக்கிள் மூலம் பிரச்சாரம் பாஜகவினர் வரவேற்பு

சங்ககிரியில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் சைக்கிள் பிரச்சாரம் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.;

Update: 2024-02-27 11:15 GMT

வரவேற்பு அளித்த பாஜகவினர்

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சுந்தரமூர்த்தி. இவர் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரத்திலிருந்து கோயம்புத்தூர் வரை சைக்கிள் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவர் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வருகை புரிந்த போது சங்ககிரி பாஜக நிர்வாகி ரமேஷ் தலைமையில் கண்ணன், முரளிதரன், சஞ்சீவ்குமார், பொன்முருகன் உள்ளிட்ட ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் சங்ககிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கோவைக்கு புறப்பட்டுச்சென்றார்.

Tags:    

Similar News