மாயவரம் சாரங்கபாணி நினைவுத்தூண் முன்பு பிரச்சாரம் துவக்கம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காளியம்மாள், முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை துவக்கினார்.

Update: 2024-02-29 08:16 GMT

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காளியம்மாள், முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை துவக்கினார்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யாத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தனித்து பாராளுமன்ற தேர்தலில் களம் காண்கிறது. பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் இன்று மயிலாடுதுறை தொகுதியில் முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் மொழிப்போர் தியாகி ஈகி சாரங்கபாணி நினைவுத்தூணுக்கு மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் தலைமையில் மரியாதை செய்து வீரவணக்கம் செய்து வேட்பாளர் காளியம்மாள் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக வீரவணக்கம் செலுத்தியபோது உடல்நலக்குறைவால் இறந்த சாந்தனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பொதுமக்களிடம் வாக்குசேரித்த காளியம்மாள் இருசக்கர வாகனம் மற்றும் நான்குசக்கரவாகனங்கள் முன்னே செல்ல திறந்த வாகனத்தில் மயிலாடுதுறை நகரில் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள் கூறுகையில் விவசாயமும் கடலும் சேர்ந்த இந்த பகுதியில் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் வாழ்வியல் அப்படியே உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம், மருத்துவத்தில் பின்தங்கியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் சாமானிய பெண்ணாக போட்டியிடுவதாக தெரிவித்த காளியம்மாள் மயிலாடுதுறையில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை தொடங்கினாலே மாவட்டத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் என்றார்.

Tags:    

Similar News