கல்லுாரியில் வளாக நேர்காணல்
சண்முகநாதன் பொறியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல் நடந்தது;
By : King 24x7 Website
Update: 2024-01-24 07:31 GMT
சண்முகநாதன் பொறியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல் நடந்தது
திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல் நடந்தது. கல்லுாரி முதல்வர் குழ.முத்துராமு தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு அலுவலர் மோகன் வரவேற் றார். சென்னை ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட் மனிதவள மேம்பாட்டுத்துறை உதவி மேலாளர் புருஷோத்தமன் நேர்காணல் நடத்தி இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 39 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணைகளை வழங்கினார். மின்னியல், மின்னணுவியல் துறைத்தலைவர் வரதராஜன் நன்றி கூறினார்.