மக்காச்சோள பயிர்களுக்கு நடுவே கஞ்சா- ஒருவர் கைது, துப்பாக்கி பறிமுதல்
கைது..;
Update: 2023-12-11 01:07 GMT
கைது செய்யப்பட்ட சித்தன்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த அணைக்கரை அருகே உள்ள திக்கரை பகுதியை சேர்ந்தவர் சித்தன் . இவர் தனது விவசாய தோட்டத்தில் மக்காச்சோள பயிர்களுக்கு இடையே ஊடு பயிராக கஞ்சா பயிரிட்டுள்ளார்.இது குறித்து தகவலறிந்த கடம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்க்கொண்டனர். அப்போது மக்காச்சோள காட்டில் பயிரிடப்பட்ட 30 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அருகில் அவரது ஓலை குடிசையில் சோதனை செய்ததில் 1 நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கஞ்சா பயிரிட்ட சித்தனை கடம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.