சிவகாசியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
சிவகாசி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீஸ் கைது செய்தனர்.;
Update: 2024-05-30 08:43 GMT
சதீஷ்குமார்
.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த ராஜூ மகன் சதீஷ்குமார்(38).இவர் தனது வீட்டின் முன் உள்ள அரசமரத்தடியில் கோயில் வைத்து பூஜை செய்து வந்தார். இவர் கோயிலை சுற்றி மரம்,பூ செடிகள் வைத்து வளர்த்து வருகிறார்.சதீஷ்குமார் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.சிவகாசி கிழக்கு எஸ்.ஐ ஆனந்தகுமார் ஆய்வு செய்த போது,கஞ்சா செடி இருந்தது தெரியவந்தது.மேலும் அவரது வீட்டில் சோதனை செய்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.