ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி

ஓமந்தூர் வி.கே.எம்.வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-12-13 06:22 GMT
 ஓமந்தூர் வி.கே.எம்.வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் வி.கே.எம். வித்யாலயா மேல்நி லைப்பள்ளியில் சி.பி.எஸ்.இ. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கலை ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் முதல்வர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். முகாமில் கல்வியியல் வல் லுனர்களான சென்னை தி ஹிந்து பப்ளிக் பள்ளி முதல்வர் பத் மினி ஸ்ரீராமன், சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் கவுரி லட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு கல்வியோடு கலைகளை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்தும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

முன்னதாக வி.கே.எம். வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளான விழுப்புரம் நாகர் பப்ளிக் பள்ளி, மரக்காணம் சாணக்யா வித்யாஷ்ரம் பள்ளி, கடலூர் ஆரோ சைல்டு இன்டர்நேஷ்னல் பள்ளி, ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி, செஞ்சி ஸ்ரீசாய்ராம் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News