டூவீலர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
கரூர் மாவட்டத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-03-01 09:38 GMT
மருத்துவமனை
காவல்துறை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள மகளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் வயது 40. இவர் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9 1/4 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெள்ளியணை காவல் எல்லைக் குட்பட்ட, குளத்து பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த இனோவா கார் மாரியப்பன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறு வாகனத்துடன் கீழே விழுந்த மாரியப்பனுக்கு தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மாரியப்பனின் மனைவி மகேஸ்வரி வயது 34 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய திருச்சி மாவட்டம், காமராஜர் நகர், இளங்கோ தெருவை சேர்ந்த மன்சூர் அலிகான் வயது 29 என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.