ராயப்பன்பட்டியில் பைக் மீது கார் மோதல்: ஒருவர் படுகாயம்
ராயப்பன்பட்டியில் கார் பைக் மீது மோதியதில் ஒருவர் சுயநினைவை இழந்துள்ளார் .;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 09:25 GMT
காவல் நிலையம்
ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்தவர் அருண். இவர் தனது டூவீலரில் காமயகவுண்டன்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். உக்கிரகாளியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த கார், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது.
தலையிலும் உடம்பிலும் பலத்த அடிபட்டு பேச்சு மூச்சின்றி கிடந்த அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விபத்து குறித்து இராயப்பன்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்