தடுப்பு சுவற்றில் கார் மோதி விபத்து;   13 பேர் உயிர் தப்பினர்

ஜெயங்கொண்டம் அருகே தடுப்பு சுவற்றில் கார் மோதிய விபத்தில், அதிர்ஷ்டவசமாக  13 பேர் உயிர் தப்பினர்.

Update: 2024-06-16 07:50 GMT

ஜெயங்கொண்டம் அருகே தடுப்பு சுவற்றில் கார் மோதிய விபத்தில், அதிர்ஷ்டவசமாக  13 பேர் உயிர் தப்பினர். 

அரியலூர், ஜூன்.16- ஜெயங்கொண்டம் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 13 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து நன்னிலம் பகுதியில் நடைபெறும் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்வதற்காக டவேரா காரில் 13 பேர் இன்று அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணியில் வந்தபோது காரானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News