போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் உயிரிழப்பு
மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் பலியான வழக்கில் கார் ஓட்டுநர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை காவலரை கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமாரை, மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் நின்றிருந்த கால்டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டது.சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). கால்டாக்சி டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு, ஒரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் போலீஸ்காரர் ரிஸ்வான் வந்துள்ளார். ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜ்குமாரை காவலர் ரிஸ்வான் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே ராஜ்குமாருடன் நின்றிருந்த பெண், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
மதுரவாயல் போலீசார் ராஜ்குமாரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், ராஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, மாரடைப்பு காரணமாக இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், போலீசார் தாக்கியதில் ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்துபோனதாக உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி மதுரவாயல் போலீஸ் தரப்பினர் கூறுகையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின்படி, மதுரவாயல் போலீசார் சென்றுள்ளனர். ராஜ்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். எனினும், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பெண் மாயமாகி விட்டார். அவர் யார், என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்’ என்றனர்.
இச்சம்பவம் குறித்து ரோந்து பணியில் இருந்த 3 காவலர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கால்டாக்சி டிரைவரின் மர்ம மரணம் குறித்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான பெண்ணையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.