இருசக்கர வாகனங்கள் மோதல் - காா் ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-13 05:07 GMT

பலியானவர்

வையம்பட்டி ஒன்றியம் வைரம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் உருமவேளாளா் மகன் சுரேந்திரன்(38). காா் ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை மாலை தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தாா். வடக்கு அம்மாபட்டி அருகே சென்றபோது முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று நிறுத்தியதால் சுரேந்திரன் சென்ற வாகனம் முன்னாள் நின்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேந்திரன் ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

Advertisement

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக கூறினா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் சுரேந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் சென்ற திருச்சி துவாக்குடி மலை பிச்சைக்குமாா் மனைவி லெட்சுமி(48) காயமடைந்த நிலையில் வையம்பட்டி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags:    

Similar News