கார் - அரசு பஸ் மோதி விபத்து
விக்கிரவாண்டி அருகே கார் - அரசு பஸ் மோதி உண்டான விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு பச்சமேடு ரோடு பகுதியை சேர்ந்த வர் செல்வதுரை (வயது 50). ஈரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தனது மனைவி செந்த மிழ்செல்வி (45), மகன் நவீன்ராஜ்(22), மகள் ஸ்ரீமதி (18) ஆகியோருடன் காரில் செங்கல்பட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு புறப்பட்டார். காரை செல்வதுரை ஓட்டி னார். நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தெற்கு பைபாஸ் அருகே வந்தபோது, இயற்கை உபாதை கழிப்ப தற்காக செல்வதுரை காரை நிறுத்தினார், அந்த சமயத்தில் பின்னால் மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பஸ் திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. செல்வ துரை குடும்பத்தினர் கார் இடிபாட்டில் சிக்கி பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் உதவியுடன் காருக்குள் சிக்கிய செல்வதுரை உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விபத்துக்குள்ளான வாகனங்கள் அங்கிருந்து அகற் றப்பட்டன. இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.