கார்கள் நேருக்கு நேர் மோதல்: தம்பதி படுகாயம்

தென்னிலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி படுகாயமடைந்தனர்.;

Update: 2023-12-03 13:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கோவை மாவட்டம், வட கோவை, கே.புதூர், மணியன் காளியப்ப தெருவை சேர்ந்தவர் சிவகணேஷ் வயது 36.இவரது மனைவி திவ்யாவாணி. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான காரில், டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை 5:30- மணி அளவில், கோவையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது கார், கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியில் உள்ள, ஏ டு பி ஹோட்டல் அருகே வந்தபோது, எதிர் திசையில் சேலம் மாவட்டம், கோணக்கப்பட்டி, கே.ஆர்.தோப்பூர், பி 3,பவர் கிரேட் காலனி பகுதியைச் சேர்ந்த மணி வயது 54 என்பவர், வேகமாகவும், அஜாகிரதையாகவும் எதிர் திசையில் ஓட்டி வந்த மற்றொரு கார் சிவகணேஷ் ஓட்டி வந்த காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த சம்பவத்தில், சிவ கணேஷ் மற்றும் அவரது மனைவி திவ்யவாணி ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிவ கணேஷ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல் துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிய மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags:    

Similar News