தகராறில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு
கனகம்மாசத்திரம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் சுற்றி திரிந்தவர்களை தட்டி கேட்டவரை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
Update: 2024-01-22 03:42 GMT
வழக்குப்பதிவு
கனகம்மாசத்திரம் அடுத்த தாசிரெட்டி கண்டிகை கிராமத்தில் 1ம் தேதி இரவு பக்கத்து கிராமமான ஆற்காடு குப்பத்தை சேர்ந்த சிலர் சுற்றி திரிந்துள்ளனர். தாசிரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் கிராம மக்களின் உதவியோடு இரவு நேரத்தில் சுற்றுவது தவறு என கண்டித்து அனுப்பிஉள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்து, ஆற்காடு குப்பத்தை சேர்ந்த விக்னேஷ், அய்யப்பன், லோகேஷ் உட்பட 10 பேர், நேற்று முன்தினம் இரவு தமிழ்செல்வன் மற்றும் ராஜ்குமாரை தாக்கினர். இது குறித்து தமிழ்செல்வனின் உறவினர் கார்த்திகேயன் அளித்த புகார்படி, 10 பேர் மீது வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.