சாலை மறியலில் ஈடுப்பட்ட பாமக பாஜக அதிமுக நூறு பேர் மீது வழக்கு !

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்கு அளிக்க அனுமதிக்க கோரி தேர்தல் அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட- பாமக,பாஜக , அதிமுக வை சேர்ந்த நூறு பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-04-22 10:07 GMT

நூறு பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகபேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா அளித்த தகவலின் பேரில் பாமகவை சேர்ந்த அய்யாசாமி பழனிச்சாமி பாஜகவை சேர்ந்த நாஞ்சில் சம்பத் மோடி கண்ணன் அதிமுக சேர்ந்த செந்தமிழ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதான தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு தேர்தல் அன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.

இதனை இல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய 2 அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலைய போலீசார் சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 143, 341 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் பாமக மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News