வியாபாரி மீது தாக்குதல் ரவுடி உட்பட 2 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் வியாபாரி மீது தாக்குதல் ரவுடி உட்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-30 17:21 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (56).இவர் நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இவரது கடையுடன் சேர்ந்து இவருக்கு சொந்தமாக டீக்கடை உள்ளது. டீக்கடையை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் நடத்தி வந்தார்.      நேற்று மாலையில் டீக்கடைக்கு இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (23 ), அனீஸ் (23) ஆகியோர் டீக்கடையில் இருந்து வடை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர்.

Advertisement

அப்போது ராஜன் அவர்களிடம் பணத்தை கேட்டுள்ளார்.      அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சேர்ந்து ராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக ராஜன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.       இதில் ராதாகிருஷ்ணன் மீது கோட்டார், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளன. இதே போன்று அனீஸ் மீது 8 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இவர்கள் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News