வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
அரியலூர் அருகில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-25 07:49 GMT
அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மகன் செல்வமணி இவர் சம்பவதன்று வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சத்தம்போட்டு கொண்டு சென்றவர்களிடம், குழந்தைகள் விளையாடுவதால் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் செல்வமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வமணி ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து இருசக்கர வாகனத்தில் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், மணிகண்டன் மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்