பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்ததாக காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு

விருதுநகரில் பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்ததாக எழுந்த புகாரில் காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2024-04-15 10:15 GMT

 விருதுநகரில் பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்ததாக எழுந்த புகாரில் காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

விருதுநகர் தந்திமர தெருவை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான மளிகை கடை நடத்தி வரும் காமராஜ் என்பவர் நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஆண்டிற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்திற்கான உத்திரவாத அட்டையை வழங்கியுள்ளார்.

இதை நேரில் கண்டறிந்த பாஜகவினர் உத்தரவாத அட்டை வழங்கும் போது ஆதார் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்டு பணம் பட்டுவாடா செய்ய நூதன முறையில் டோக்கன் வழங்குவதாகபாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று புகார் அளித்தனர். இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் அந்தோணி ராஜ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் நடத்தை விதியை மீறியது, லஞ்சம் வழங்க முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காமராஜ் மீது விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News