கிளிக்குடி அருகே ஆர்டிஓ வை கொல்ல முயன்ற வழக்கு: லாரி உரிமையாளர் கைது

கிளிக்குடி அருகே ஆர்டிஓ வை கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்ட லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-21 12:06 GMT

ஆர்டிஓ கொலை முயற்சி வழக்கில் கைதான லாரி உரிமையாளர்

புதுக்கோட்டை மாவட்டம், கிளிக்குடி அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற கோட்டாட்சியரை (ஆர்டிஓ) கொல்ல முயன்ற வழக்கில், தேடப்பட்டு வந்த மணல் லாரி உரிமையாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். கிளிக்குடி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வியாழக்கிழமை (ஜூன் 13) கிடைத்த தகவலின்பேரில்,

அந்தப் பகுதியில் சோதனை நடத்த ஆர்டிஓ தெய்வநாயகி உள்ளிட்டோர் காரில் சென்றனர். வளையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஆற்றுமணல் ஏற்றி வந்த ஒரு லாரியை ஆர்டிஓ தடுக்க முயன்றார். அப்போது லாரியை நிறுத்தாத அதன் ஓட்டுநர் சங்கர், ஆர்டிஓ கார் மீது மோதினார்.

கார் ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து காரை வேறுபக்கம் திருப்பியதில், காரின் ஒருபகுதியில் லாரி மோதி நின்றுவிட்டது. லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். புகாரின்பேரில், அன்னவாசல் போலீஸார், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான கவிநாரிபட்டியைச் சேர்ந்த சங்கரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளரான அதிமுக ஓட்டுநர் அணி நிர்வாகிசுந்தரத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை பரம்பூரை அடுத்துள்ள சொக்கம்பட்டியில் பதுங்கியிருந்த சுந்தரத்தை அன்னவாசல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News