சாலை மறியல் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு பதிவு

பாலக்கோடு மார்க்கெட் அருகே முன் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2024-02-22 02:47 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் ஆணையம் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருக்கோயில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது திருக்கோவில் வளாகத்தில் எந்த விதமான நிகழ்வுகளும் நடைபெற அனுமதி இல்லை என இந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்ததை அடுத்து ஊர் கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பென்னாகரம் தக்காளி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள தர்மபுரி ஓசூர் சாலையில் தீரன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட நேரம் கழித்து பொதுமக்களும் நிர்வாகிகளும் கலைந்து சென்றனர் இதனை எடுத்து முன் அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோர் மீது பாலக்கோடு காவல்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News