குடும்பத் தகராறில் நாலு பேர் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம்,சுத்தமலை காட்டுகொட்டாய் பகுதியில் குடும்ப தகராறில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-05-27 06:09 GMT
வழக்கு பதிவு
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சுத்தமலை, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 25; இவரது மனைவி சுசீலா, 25; இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக சுசீலா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் கணவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி அவரது கொழுந்தனார் ரஞ்சித் குமாருக்கும், சுசீலாவிற்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவர் ஆஜித்குமார், மாமியார் ராதிகா, 45; ரஞ்சித்குமார் ஆகியோர் சேர்ந்து சுசீலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், ரஞ்சித்குமார், ராதிகா, அஜித்குமார், சுசீலா ஆகிய 4 பேர் மீதும் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.