குமரியில் ஒரே நாளில் ரூ. 10.46 லட்சம் பறிமுதல்
குமரியில் ஒரே நாளில் பறக்கும் படை ரூ.10.46 லட்சம் பறிமுதல்
Update: 2024-04-12 09:58 GMT
கன்னியாகுமரிமக்களவை தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் 36 குழுவினர் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் இந்த குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை மொத்தம் ரூ. 2 கோடியே 35 லட்சத்து 90 ஆயிரத்து 540 தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஒரே நாளில் மட்டும் ரூ 10 லட்சத்து 46 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நாகர்கோவிலில் ரூ 1லட்சத்து 92 ஆயிரம், குளச்சலில் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம், பத்மநாதபுரத்தில் ரூ. 3 லட்சத்து 8 ஆயிரத்து 840, கிள்ளியூரில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 110 ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.