செவந்தாம்பாளையம் பகுதியில் பணம் பறிமுதல்
திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி நான்கு கொண்டு சென்ற 1,02,600 ரூபாயை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு வட்டம், செவந்தம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்பு உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் தமிழரசு என்பவர் வாகன தணிக்கையின் போது,
கீர்த்தனா என்பவரது நான்கு சக்கர வாகனத்தினை சோதனை செய்தபோது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 1,02,600 கொண்டு சென்றது தெரிய வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தை அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவிஆணையாளர் கணக்கு (பொ) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.