ஜாதி கலவரத்தை தடுக்க வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாளர் !

மாணவர்களுக்கு இடையே ஏற்படும் ஜாதி கலவரத்தை தடுக்க வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 09:26 GMT

தேமுதிக 

தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலியில் மாணவர்களிடையே ஜாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது இது போன்ற நிகழ்வு அதே பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே நிகழ்ந்ததுள்ளது.

இன்றைக்கு மாணவர்களிடையே காணப்படும் ஜாதி மோதல் என்பது தொடர்கதையாக மாறினால், அவர்களின் எதிர்காலமும் வருங்கால சமுதாயமும் பாதிக்கூடிய வகையில் அமைய வாய்ப்பு இருக்கிறது மாணவர்களுக்குள் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஒரே மாதிரியான சீருடைகள் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், எத்தனை பாரதியார், பெரியார் வந்தாலும், ஜாதிகள் இல்லை என்று சொன்னாலும், இந்த ஜாதி வெறி என்பது இளம் வயதிலேயே, அதுவும் பள்ளிக்கூடங்களிலிருந்து தொடங்குவது, எதிர்காலத் தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் எனவே முதல்வர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் தேமுதிக சார்பாக கேட்டுகொள்கிறோம்.

Tags:    

Similar News