திருபாசேத்தியில் டாக்டர்கள் இன்றி கால்நடை வளர்ப்போர் அவதி

திருபாசேத்தியில் டாக்டர்கள் இன்றி கால்நடை வளர்ப்போர் அவதிக்குள்ளகியுள்ளனர்.

Update: 2023-12-29 16:14 GMT

கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கால்நடை மருந்தகத்திற்கு டாக்டர்கள் நியமிக்கப்படாததால் தினசரி கால்நடை வளர்ப்பவர்கள் டாக்டருக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. திருப்புவனம் வட்டாரத்தில் 10 ஆயிரத்து 649 பசு, காளைகளும், 10 ஆயிரத்து 654 எருமைகளும், 11 ஆயிரத்து 686 செம்மறியாடுகளும், 17 ஆயிரத்து 231 வெள்ளாடுகளும் உள்ளன.

பூவந்தி, அல்லிநகரம், கொந்தகை, திருப்புவனம், பழையனுார், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் போதிய டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஒரே ஒரு டாக்டர் சுழற்சி முறையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வரவேண்டியுள்ளது.

இதனால் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். 2015ல் திருப்பாச்சேத்தியில் கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டது. திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், செம்பராயனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்த இந்த மருந்தகத்திற்கு கடந்த சில வருடங்களாக டாக்டர்கள் நியமிக்கப்படவே இல்லை. ஒரே ஒரு உதவியாளர் மட்டும் வந்து மதியம் ஒரு மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

கறவை மாடுகளுக்கு சினை ஊசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் கறவை மாடு வளர்ப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தினசரி கால்நடைகளை வெகு துாரத்தில் இருந்து நடத்தியே அழைத்து வந்து காத்து கிடந்து ஏமாற்றமடைகின்றனர்

Tags:    

Similar News