கோடைகாலத்தில் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்: ஆட்சியர்
கோடைகாலத்தில் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோடைகாலத்தில் அதிகரித்துள்ள வெயில் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பிணை ஏற்படுத்தும். கோடைகாலங்களில் சுற்றுப்புற வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் போது கறவை மாடுகளில் உற்பத்தியாகின்ற,
வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உடல் வெப்பநிலை உயர்ந்து வெப்ப அயற்சி ஏற்படுகிறது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைந்துவிடும், சினை பிடிக்கும் திறன் குறைந்துவிடும் ஆடுகளில் இறைச்சி உற்பத்தி அளவு பாதிப்பு ஏற்படும் உடல் வளர்ச்சி குறைந்துவிடும்,
கோழிகள் வெப்ப அழற்சி காரணமாக இறப்பு அதிகரிக்கும் உடல் எடை குறையும் வளர்ப்பு பிராணிகளான நாய்கள் அமைதியின்றியும் தோல் வியாதி ஏற்படும் நிலையில் உருவாகும், எனவே கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு கால்நடைத்துறையின் சார்பில் தெரிவித்துள்ளபடி கறவை மாடுகளை காலை 6 மணிமுதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.
நீண்ட தூரம் மேய்ச்சல் நிலங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சுமார் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் கறவை மாடுகளுக்கு அளிக்க வேண்டும். பொட்டாசியம் சத்து மிகுந்த கோதுமை தீவனம் அளிக்கலாம். மேய்ச்சலுக்கு சென்று வந்த பின் கால்நடைகளை தண்ணீர் மூலம் குளிக்க வைக்க வேண்டும். நிழல் பகுதியிலேயே கால்நடைகளை பராமரிக்க வேண்டும்.
அவசர சிகிச்சை தேவைப்படும் போது “1962” கால்நடை மருத்துவ சேவையை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.