பேராவூரணி அரசு கல்லூரியில் முப்பெரும் விழா 

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது

Update: 2024-02-28 13:13 GMT

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விளையாட்டு விழா, முத்தமிழ் விழா ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார்.  தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி.ராணி வரவேற்றார்.

பட்டிமன்றப் பேச்சாளர் பி.சுப்பையா சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.  பேச்சாளர் அ.அப்துல் மஜீத், ஒன்றியப் பெருந்தலைவர் முத்துலெட்சுமி காளிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி, மற்றும் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதில், விழாவில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற, நடனம், நாடகம், பாடல்கள் என, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இருசக்கர வாகனத்தை இயக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு சென்றால் ஏற்படும் விபத்துக்கள் - உயிரிழப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊமை நாடகத்தை நடத்தினர். இது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

Tags:    

Similar News