சமத்துவ பொங்கல் கல்லுாரிகளில் விமரிசை
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஸ்வமஹா வித்யாலயா பல்கலையில் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் துறையின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. பல்கலை துணைவேந்தர் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தார். பதிவாளர் ஜி.ஸ்ரீராம், நெறியாளர் வெங்கட்ராமன், துறை தலைவர் எம்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலை மாணவியர் பாரம்பரியமான முறையில், விறகு, மண் அடுப்பில், மண்பாண்டத்தில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இதில், தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் முனைவர் கோமதி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா நடந்தது. தொடர்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.