மகளிர் தின விழா கொண்டாட்டம்
திண்டுக்கல்லில் தரணி குழுமம்,தாய் கூடு பவுண்டேஷன் மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் திண்டுக்கல் மாநகரில் உள்ள சாதனை படைத்த பெண்களுக்கான வீரமங்கை விருது வழங்கும் விழா நடந்தது.;
Update: 2024-03-03 13:11 GMT
மகளிர் தின விழா
திண்டுக்கல்லில் மகளிர் தின விழா நடந்தது.திண்டுக்கல்லில் தரணி குழுமம், தாய் கூடு பவுண்டேஷன் மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் திண்டுக்கல் மாநகரில் உள்ள சாதனை படைத்த பெண்களுக்கான வீரமங்கை விருது வழங்கும் விழா நடந்தது. இதில் தரணி குழுமம் சேர்மன் ரத்தினம்,திருவருட் பேரவை இணைச் செயலாளர் திபுர்சியஸ், மத நல்லிணக்க செம்மல் காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாய் கூடு பவுண்டேஷன் நிறுவனர் குணவதி செய்திருந்தார்.