உலக காடுகள் மற்றும் நீர் தின விழா
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் மற்றும் நீர் நாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தொழிற்சாலை வளாகத்திற்குள் நடப்பட்டது.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் மற்றும் நீர் நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முத்த செயல் உதவித்தலைவர் (பணியகம்) சீனிவாசன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்து, தண்ணீர் அவசியம் பற்றியும், வருங்கால மக்களின் நீர் தேவை மற்றும் நீர் நிர்வாகம் பற்றியும் எடுத்துரைத்து அறிவுறுத்தினார். மேலும் நீர் அவசியத்தை வலிறுத்தும் வண்ணமும், முறையாக நீரை பயன்படுத்தும் வழியிலும் விழிப்புணர்வு பதாகைகளை துறைத் தலைவர்களுக்கு வழங்கினார்.
விழாவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவராலும் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. உதவி தலைவர் (உற்பத்தி), உதவி தலைவர் (பவர்பிளாண்ட்), மூத்த அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் செய்தனர்.