அலைபேசி - அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும்”- மீளும் வழிமுறைகள்

காலத்தை எவன் தன் வசம் வைத்திருக்கிறானோ, அவன் தான் வெற்றி பெறுகிறான் என திரைக்கலைஞர் மருத்துவர் கே.சர்மிளா தெரிவித்தார்.

Update: 2024-03-25 02:01 GMT

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர் அருகே வல்லம்  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், “அலைபேசி - அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும்”- மீளும் வழிமுறைகள் எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாணவர் மன்றம் இணைச் செயலாளர்  எஸ்.இராஜலெட்சுமி  வரவேற்றார். மாணவர் நலப்பிரிவு துணை இயக்குநர்  பேராசிரியர் எஸ்.கோமதி  தொடக்கவுரையாற்றினார். பல்கலைக்கழகத்தின்  வாழ்வியல் மேலாண்மை மற்றும் அறிவியல் துறை முதன்மையர் பேராசிரியர் பி.விஜயலெட்சுமி வாழ்த்திப் பேசினார். 

இதில், சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர், திரைக்கலைஞர்,  மருத்துவர் கே.சர்மிளா கலந்து கொண்டு பேசியதாவது,  மாணவச் செல்வங்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக அலைபேசியில் தங்களது பொழுதினை செலவழிக்கிறார்கள்  கல்வியறிவு, எழுத்தறிவு காலத்திற்கு தகுந்தார்போல் நமது பயன்பாட்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மதுப் பழக்கம், போதைப் பழக்கம் போல இப்பொழுது தேவையற்ற அலைபேசி செயலிகளால் மாணவர்களுக்கு கவனிக்கும் திறன் மற்றும் சிந்திக்கும் திறன் சீரழிந்து கொண்டிருக்கிறது.  அலைபேசியை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்.

எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர வேண்டும்.   நாம் அலைபேசி பயன்பாடுகளை நல்ல வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தனிநபர் தங்களுடைய அலைபேசியை தமது சுயக்கட்டுப்பாட்டில் பயன்படுத்த வேண்டும். நேரம் பொன் போன்றது, காலம் உயிர் போன்றது. வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும், காலத்தை எவன் தன்வசம் வைத்துள்ளானோ அவன்தான் வெற்றி பெறுகிறான்.  முடியாது என்று எதுவேமே இல்லை. நீ யார் என்று உன்னை நீயே அங்கீகரித்து கொள். உன் உழைப்புதான் உனக்கு மூலதனம். மாணவப் பருவத்தில் சிந்திக்க வேண்டும்.

சிந்திப்பதை நாம் எப்போது மறந்து விடுகிறோமோ, அப்போதே நம்முறைடய உயிரும் பிரிந்து விடுகிறது. சிந்தனையும் தேடுதலுமே தான் ஒரு முக்கிமான இடத்தை பெறுகிறது. இதுவே வெற்றிக்கு காரணமாக அமைகின்றது.  இருபது வருடங்களுக்கு முன் இப்போது இருப்பது போன்ற சமுக வலைத்தளங்கள் கிடையாது. இன்று உடனுக்கு உடன் நாம் உலகில் நடக்கும் விஷயங்களை உணருகிறோம். இது காலத்தின் கட்டாயமாகும். ஆகையால் மாணவர்கள் செல்பேசியை நல்லமுறையில் பயன்படுத்தி, நல்வழியில் பயணிக்க வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News