மத்திய அரசின் 10ஆண்டுகாலம் சாதனை ஆட்சி: ஜி.கே.வாசன் பிரச்சாரம்
ஜி.கே.வாசன் நாமகிரிப்பேட்டை பகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் கே பி ராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
மத்திய அரசின் கடந்த கால 10 ஆண்டுகால ஆட்சி சாதனை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை ஆட்சியாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள பா.ஜ.க, வேட்பாளர்களில் முக்கிய நட்சத்திர வேட்பாளர்களில் கே.பி. ராமலிங்கமும் ஒருவர். 45 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்ற இவர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதியுடன் நெருங்கி பழகியவர்.
இந்த தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளுடன் போராடி பல திட்டங்களை கொண்டு வரும் திறமை படைத்தனர்.
பல நேரங்களில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகளுடன் போராடி பல திட்டங்களை செயல்படுத்தியவர். பெண்களுக்காக நூறுநாள் வேலை திட்ட ஊதியம், 319 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அனைவருக்கும் வீடு, கழிவறை திட்டம், அனைவருக்கும் கேஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, இலவச உணவு தானியம், முத்தரா கடன்,
சாலையோர வியாபாரிகளுக்கு கடன், கல்வி உதவித்தொகை, மலிவு விலை மருத்து கடை என பல திட்டங்களை மத்திய அரசு வழங்கி மக்களின் வாழ்வை உயர்த்தி வருகிறது. அதற்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய வேட்பாளராக கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார்.
மக்கள் விரோத ஆட்சியாக தி.முக., உள்ளது. மக்கள் மீது சுமை அதிகரித்து வருகிறது. பால் கட்டணம் உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, பதிவு கட்டணம் உயர்வு என மக்களின் தோள்கலில் பாரத்தை ஏற்றி வருகின்றனர். தி.மு.கவுக்கோ, அ.தி.மு.கவுக்கோ ஓட்டுப்போட்டு தவறை செய்யாதீர்கள். அவர்களை தேர்ந்து எடுத்தால் எந்த திட்டமும் கிடைக்காது. பாஜகவிற்கு ஓட்டுபோட்டால் பிரதமர் மட்டுமின்றி அமைச்சர்களையும் நேரடியாக சந்தித்து தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வரக்கூடிய தகுதி படைத்தவர் கே.பி.ராமலிங்கம் என்று பேசினார் ஜி.கே. வாசன். கூட்டத்தில் பாஜக, அமமுக, தமாக., பாமக., உள்ளிட்ட கூட்டணி கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் போண்டா விற்பனை செய்து, கட்சியினருடன் டீ குடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஜி.கே.வாசன்.மற்றும் பாஜக வேட்பாளர் டாக்டர் கே பி ராமலிங்கம் ஆகியோர்