வேலூரில் மத்திய பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.;
தற்கொலை செய்து கொண்ட தனசேகர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் குணசேகரன்.இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வசந்தா, மகள் மருத்துவர் சுஷ்மா, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
மகன் ஜஸ்வந்த் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியில் இருந்த குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடல் குடியாத்தம் கொண்டுவரப்பட்டு ராணுவம் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்ய படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர் . துறை ரீதியான விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.