சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில். பூச்சொரிதல் விழா, மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து அம்மன் அலங்காரத்துடன் பூ எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது. பெரம்பலூர் அடுத்துள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மன் மிகவும் பழமையும், புராதான வரலாறு கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறும் .
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் திருவிழாவை முன்னிட்டு அதற்கான பூச்சொரிதல் விழா மே 7 ம் தேதி இரவு 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் நகர் வடக்கு மாதவி. சாலை புதிய பேருந்து நிலையம் நான்கு ரோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்பகுதியான குரும்பலூர் வாலிகண்டபுரம், நாட்டார் மங்களம் சிறுவாச்சூர், அரும்பாவூர், கூடலூர், மேலும் திருச்சி, உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் இருந்தும் பல வண்ண விளக்குகளால் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
அப்போது வான வேடிக்கை மற்றும் ஜெண்டை மேளம், கரகாட்டம் தப்பாட்டகலை நிகழ்ச்சியுடன். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக வழங்கப்படும் பூக்களை எடுத்துக் கொண்டு சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மே 8ம் தேதி காலை 9 மணி வரை பல்வேறு ஊர்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வந்தன மேலும் கோவிலில் மதுரகாளி அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து பின்பு பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் மே 23ம் தேதி தேர் திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.