அண்ணா விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
Update: 2024-05-01 07:07 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக நீச்சல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நீச்சல் தெரியாதவர்களுக்கு நீச்சல் பயிற்சி வகுப்புகள், நீச்சல் தெரிந்தவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்புகள், உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு நீச்சல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.