திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்
விருதுநகரில் நடந்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்.;
Update: 2024-02-06 07:18 GMT
ஆட்சியருடன் மாணவிகள்
அரியலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ் இலக்கிய மன்ற தேர்வில் வெற்றிபெற்ற 11 ஆம் வகுப்பு பயிலும் 17 மாணவ, மாணவிகள் பிப்ரவரி 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் நடைப்பெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு இரண்டு வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகையாக வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டது. இதில் முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி உள்ளிட்ட பள்ளிகல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.