கனமழைக்கு வாய்ப்பு, மீட்பு ,தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் - ஆட்சியர்

Update: 2023-12-01 11:39 GMT

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டத்தில், காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. அதோடு, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், நாளை 2ம் தேதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதோடு, சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், புதனன்று பதிவான மழை அளவின் படி, அதிகபட்சமாக ஆரணியில் 49.60 மிமீ மழை பதிவானது. மேலும், திருவண்ணாமலையில் 7.20 ஜமுனாமரத்தூரில் 21 மிமீ, கலசபாக்கத்தில் 10 மிமீ, தண்டராம்பட்டில் 2 மிமீ, செய்யாறில் 13 மிமீ, வந்தவாசியில் 24 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 14.40 மிமீ, வெம்பாக்கத்தில் 6 மிமீ, சேத்துப் பட்டில் 2 மிமீ மழை பதிவானது. மி மீ இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த சில நாட்களில் கனமழை கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

மழை பாதிப்புகளை தடுக்கவும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த வும் 12 தாலுகாக்களுக்கும் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வாருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, மண்டல அளவிலான குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்பாராமல் ஏற்படும் புயல், கனமழை பாதிப்புகளின்போது, முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக்குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம், மேலாண்மை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, முழுமையாக நிரம்பியுள்ள 114 ஏரிகள்தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் மழையின் போது தண்ணீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட 56 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும்,கன மழைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையின் 04175-232377  கட்டணமில்லா தொலைபேசி 04175- 1077 என்ற எண்ககளில் தொடர்பு கொள்ளலாம்.


Tags:    

Similar News