திருவண்ணாமலை : உலக நன்மைக்காக சண்டி ஹோமம்
மாருதி பஜனா மண்டலி சார்பில் உலக நன்மைக்காக திருவண்ணாமலையில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டனர்
Update: 2023-12-01 08:45 GMT
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் பாவகடாவில் செயல்பட்டு வரும் மாருதி பஜனா மண்டலி அமைப்பு இந்தியா முழுவதும் பாடல் பெற்ற முக்கிய கோயில் தலங்களில் உலக நன்மைக்காக சண்டி ஹோமத்தை நடத்தி வருகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் இந்த அமைப்பின் சார்பில் 18வது சண்டி ஹோமம் நேற்று முன்தினம் தொடங்கியது. திருவண்ணாமலை-திருக்கோயிலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 3நாட்கள் நடைபெறும் இந்த ஹோமமம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கலசஸ்தாபனம், மகாசங்கல்பம் ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை ருத்ரபிஷேகம், ஹோமம், மங்கல ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது ராசி, நட்சத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டனர். காலை சண்டி ஹோமம் நடக்கிறது. மாலையில் சிவன்-பார்வதி திருக்கல்யாணத்தோடு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஏ.சந்திரசேகரன் செய்திருந்தார்.