சந்திராயன் - 3 வெற்றிக்கு பறவை காவடி எடுத்த பக்தர்!
விராலிமலையில் நடந்த தைப்பூச விழாவில் பக்தர் ஒருவர் சந்திராயன் - 3 வெற்றிக்கு பறவை காவடி எடுத்து வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Update: 2024-01-26 11:54 GMT
விராலிமலையில் நடைபெற்ற தைப்பூச விழாவில் பக்தர் ஒருவர் சந்திராயன் 3 வெற்றிக்கு பறவை காவடி எடுத்து தனது பக்தியை வித்தியாசமான முறையில் நிறைவேற்றினார்.
விராலிமலை முருகன் மலைக்கோயில் தைப்பூச விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சுவாமி வீதி உலா தேரோட்டம் என விராலிமலையே விழா கோலம் போட்டு இருந்தது. இந்த நிலையில் தைப்பூசமான வியாழக்கிழமை வித்தியாசமான நிகழ்வாக பக்தர் ஒருவர் சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு விஞ்ஞானிகள் மற்றும் முருகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக விராலிமலை அருகே உள்ள கொடும்பாளுரை சேர்ந்த ஆரப்பன் வயது 40 என்ற பக்தர் சந்திராயன் 3 ராக்கெட் வடிவிலான அமைப்பில் தேசியக் கொடியை அமைத்து பறவை காவடியை சுமந்து கிரிவலப் பாதையை வளம் வந்து தனது வழிபாட்டை நிறைவேற்றினார்.