பராமரிப்புப் பணிகளால் ரயில்களின் நேரத்தில் மாற்றம்
கரூா் - திருச்சி மாா்க்கத்துக்கு உள்பட்ட லாலாபேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-02-19 04:24 GMT
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு இடையேயான ரயில், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வரும் 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வழக்கமாக புறப்படும் நேரத்துக்கு பதிலாக 1.30 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். இதே போல, பாலக்காடு - திருச்சி இடையேயான ரயில் வரும் 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். பகுதி அளவில் ரத்து செய்யப்படும். அதே நேரத்தில், வரும் 19, 21, 23 மற்றும் 26-ஆம் தேதிகளில், கரூரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு லாலாபேட்டை ரயில் நிலையம் வழியாக திருச்சி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது