மேலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்
மேலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளி மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
மேலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளி மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 21ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் தனது காரில் இருந்த போது,
5க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல், அவரின் கார் மீது டிபன் பாக்ஸில் வைத்து நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில், அதிர்ச்சியடைந்த நவீன்குமார் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நிலையில், அவரை அக்கும்பல் வாளால் வெட்டி உள்ளனர்.
இதில் கையில் பலத்த காயமடைந்த நவீன்குமார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். இதுகுறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே, அசோக், கார்த்திக், பாக்யராஜ், மற்றும் ராஜபிரபு உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வெள்ளையத்தேவன் (25) என்பவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து, சரணடைந்த வெள்ளையத் தேவனை வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.