பிரான்மலையில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிங்கம்புணரி பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

Update: 2024-04-23 08:44 GMT

 சித்திரை தேரோட்டம்  

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் பூதம், யானை, ரிஷபம், நந்தீசர், கிளி, கேடயம் உள்ளிட்ட வாகனங்களிலும் பஞ்சமூர்த்திகள் வாகனங்களிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலாவரும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

9 நாள் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. முன்னதாக அன்னை குயிலமுத நாயகியும், திருக்கொடுங்குன்றநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மலை அடிவாரத்தில 4 தேர்கள் இழுக்கப்பட்டது. முதலாவது தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் முருகன் வள்ளி தெய்வானையுடனும், மூன்றாவது தேரில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மனும் , நான்காவது தேரில் பிரியாவிடை அம்மன் வளம் வர தேர் நிலையை அடைந்தது. பின்னர் மாம்பழங்கள், வாழைப்பழங்கள், மேல் இருந்து வீச தேர் இழுத்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வீசப்படும் மாங்கனிகளை பிடித்தனர்.

Tags:    

Similar News