செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டில் தரமான மரக்கன்றுகள் மற்றும் நடவு பொருட்களை வழங்க மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
Update: 2024-05-18 12:36 GMT
செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் கிராமத்தில், தனியார் நிலத்தில், 1.5 ஏக்கர் பரப்பளவில், கோ 55 ரக நெல் விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணையை, கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சப் -- கலெக்டர் நாராயணசர்மா, வேளாண்மை இணை இயக்குனர் அசோக், முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து, ஆத்துாரில் உள்ள மாநில தோட்டக்கலை பண்ணையை, கலெக்டர் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தேவையான தரமான மரக்கன்றுகள் மற்றும் நடவு பொருட்களை வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.