அரசு பள்ளிகளுக்கு சதுரங்க பலகைகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் அரசுப்பள்ளிகளுக்கு இலவசமாக சதுரங்க பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
சதுரங்க பலகை வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் 80 அரசு பள்ளிகளுக்கு 500 சதுரங்க பலகைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழக தலைவர் பழனி, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆழ்வார் தலைமை தாங்கினர்.
டி.இ.ஓ.,க்கள் லதா, ஜோதிமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, திருநாவலுார், திருக்கோவிலுார் என 8 தாலுகாக்களைச் சேர்ந்த 80 அரசு பள்ளிகளுக்கு 500 சதுரங்க பலகை செட் இலவசமாக வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க தலைவர் இமானுவேல் சசிகுமார், பொரு ளாளர் செல்வகுமார், முன்னாள் தலைவர் ராமலிங்கம், இயக்குனர் அம்பேத்கர், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.