திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம் - முதல்வர் திறந்தார்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நவல்பட்டு அண்ணா நகர் ஐடி பார்க்கில் ரூ 59. 57 கோடி .மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
Update: 2024-02-17 09:58 GMT
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள்,தீயணைப்பு நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை கட்டிடங்களை பயன்பட்டிற்கு தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நவம்பர் 59.57 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 அதிரடி பரப்பளவில் கீழ்தளம் மற்றும் நான்கு மேல் தளம் கொண்ட தகவல் தொழில்நுட்பம் பூங்காவையும் திறந்து வைத்தார். அதற்கு நன்றி தெரித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் பேசியதாவது. தமிழகம் முழுவதும் 8 தகவல் தொழில்நுட்ப பூங்காகளை திறந்து வைப்பதாகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் கலைஞர் டைட்டில் பார்க்குகளை அமைத்துக்கொடுத்ததுதான் திருச்சி மாவட்டத்தில் பஞ்சபூர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரூ 600 கோடி மதிப்பீடில் புதிதாக தகவல் தொழில்நுட்பப் தொடங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளதற்கு நன்றியை தெரிவிப்பதோடு அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 59.57கோடி மதிப்பீட்டில் புதிதாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய கட்டிடம் திறந்து வைத்ததற்கு நன்றி என்றும் இந்த கட்டிடம் தரைதளத்துடன் நான்கு மேல் தளங்களை கொண்டுள்ளது என்று கூறினார். இந்த விழாவில் தகவல் தொழில்நுட்ப மேலாளர் புவனேஸ்வரி, நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்