மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெற உள்ளது.

Update: 2023-12-18 13:03 GMT

பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெற உள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஜிவி மஹால் தனியார் திருமண மண்டபத்தில், நாளை (செவ்வாய்கிழமை) மக்களுடன் முதல்வர் மக்கள் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், சொத்து வரி, குடிநீர் வரி, பெயர் மாற்றங்கள், பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை வழங்கல் ,நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் சேவைகளுக்கான முகாமானது நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.. பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 7,8,9,10,11 மற்றும் 21 வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.......
Tags:    

Similar News