ஆத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு நரசிங்கபுரத்தில் திமுக நகரச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் கொடியேற்றி, மக்களுக்கு கேக் வழங்கி கொண்டாடப்பட்டது.;
Update: 2024-03-01 06:01 GMT
பயணிகளுக்கு கேக் வழங்கிய திமுகவினர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் கிழக்கு தெருப்பகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு நகரச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் திமுகவினர் அப்பகுதியில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு கேக் வழங்கி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர மன்ற உறுப்பினர்கள் திமுகவினர் நகர நிர்வாகிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.