நகர திமுக சார்பில் முதல்வர் பிறந்த தின நிகழ்ச்சி

திருச்செங்கோடு நகர திமுக சார்பில் முதல்வர் பிறந்த தின நிகழ்ச்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-01 09:15 GMT

மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செங்கோடு நகர திமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் திமுக கழக கொடி ஏற்றப்பட்டது,தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News