மயிலாடுதுறை நகராட்சியில் மக்களைத் தேடி முதல்வர் திட்டம்

மயிலாடுதுறை நகரில் மக்களின் முதல்வர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.

Update: 2023-12-19 14:04 GMT

மக்களை தேடி முதல்வர் திட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிக்குட்பட்ட வார்டு 1,2,3,4,5,6-க்குஃ திருஇந்தளுர் கே.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு ஏற்றவாறு உடனடி தீர்வாகவும் அல்லது 30 தினங்களுக்குள் உரிய முறையில் தீர்வு காணப்படும்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் நகர்மன்ற உறுப்பினர் ரிஷி மற்றும் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News