அரக்கோணத்தில் லாரி மோதி குழந்தை பலி

அரக்கோணத்தில் லாரி மோதியதில் குழந்தை பரிதாபமாக பலியானது.;

Update: 2023-12-18 10:58 GMT

அரக்கோணத்தில் லாரி மோதி குழந்தை பலி.


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் விண்டர்பேட்டை எம். ஆர் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (40). இவர் சோளிங்கரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோனிஷா . இவர்களது இரண்டாவது மகன் ஜோனத்தான் ராஜ் (4). இன்று தாய் மோனிஷாவுடன் இரு சக்கர வாகனத்தில் ஜோனத்தான்ராஜ் வந்துள்ளார் . வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக அவரது தாய் மோனிஷா கடைக்கு சென்ற நிலையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ஜோனத்தான்ராஜ் கீழே ஓடிவந்துள்ளார்.

Advertisement

அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ஜோனத்தான்ராஜ் மீது மோதியதில் சிறுவனின் தலை நசுங்கி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். குழந்தையின் உடலை டவுன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இதனை கண்ட காவல் ஆய்வாளர் பாரதி கண்ணீர் விட்டு அழுதார்..

Tags:    

Similar News